Breaking News
Home / admin (page 11)

admin

குடியுரிமை திருத்தச்சட்டம் – முதல் மாநிலமாக அகதிகளின் பட்டியலை சமர்ப்பித்தது உத்தர பிரதேசம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இதற்கிடையில் குடியுரிமை திருத்தச்சட்டம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் (ஜனவரி 10) நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் …

Read More »

சபரிமலை வழக்கு 3 வாரத்திற்கு ஒத்திவைப்பு

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது இல்லை என்ற நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அந்த கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து …

Read More »

ஜேஎன்யூ வன்முறை- வாட்ஸ்அப், கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள், வாட்ஸ்அப் செய்திகள், அதன் தொடர்புடைய பதிவுகள் மற்றும் தகவல்கள் உள்ளிட்ட தரவுகளைப் பாதுகாக்கக் கோரி, ஜே.என்.யூ. பேராசிரியர்கள் அமீத் பரமேஸ்வரன், அதுல் சூட் மற்றும் சுக்லா விநாயக் சாவந்த் ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். பல்கலைக்கழக வன்முறை விவகாரத்தில் டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் டெல்லி அரசாங்கம் உரிய நடவடிக்கை …

Read More »

114 அடி உயர இயேசு சிலை அமைக்க எதிர்ப்பு- இந்து அமைப்புகள் போராட்டம்

கர்நாடக மாநிலம் கனகபுரா தாலுகாவில் உள்ள கபாலிபேட்டா பகுதியில் 114 அடி உயர பிரமாண்ட இயேசு கிறிஸ்துவின் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் நிலம் வழங்கி உள்ளார். இயேசு சிலை அமைப்பதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இயேசு சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து ஜகரான் வேதிகே …

Read More »

ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்மித்தை விராட் கோலியுடன் ஒப்பிடவே முடியாது: கவுதம் காம்பிர்

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் நடைபெற்று கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் நான்கு பேரும் அசத்தி வருகிறார்கள். ஆனால் ஒருநாள் போட்டியில் விராட் கோலி உச்சத்தில் இருக்கிறார். டி20-யையும் சேர்த்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை அவருடன் ஒப்பிடவே முடியாது என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளா். இதுகுறித்து …

Read More »

தவான், கேஎல் ராகுலுக்காக 3-வது இடத்தை விட்டுக் கொடுக்கிறார் விராட் கோலி

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவானுக்கு காயம் ஏற்பட்டதால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். நம்பமுடியாத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதனால் லோகேஷ் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் தவானும் களம் இறங்கினார். இருவரும் …

Read More »

மீண்டும் டி20-யில் வெயின் பிராவோ: 2016-க்குப்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்

வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (15-ந்தேதி) தொடங்குகிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. கிரிக்கெட் போர்டு உடன் …

Read More »

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார் பும்ரா

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2018-19-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சி.கே. நாயுடு கோப்பைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீகாந்த், தேர்வு …

Read More »

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா

சமீபகாலமாக பல்வேறு துறைகளில் ஜாம்பவான்களாக இருப்பவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்று வருகின்றன. நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படம் கூட இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியே உருவாகியுள்ளது. இந்த நிலையில் இசையில் பல சாதனைகளைப் படைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் …

Read More »

கட்டாயப்படுத்தினா, அது தோல்வியிலதான் முடியும் – ராணா

தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்தி படங்களிலும் நடித்துவரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நிஜ வாழ்க்கை ரொம்ப போரடித்ததால் நடிப்பை தொழிலாக தேர்ந்தெடுத்தேன். நிஜத்துல செய்ய முடியாததை, சினிமாவுல …

Read More »